இந்திய / சர்வதேச விருதுகளும் அதற்கான துறைகளும்


விருது அதற்கான துறைகள்
பாரத ரத்னா விருது கலை, இலக்கியம், அறிவியல், பொதுச் சேவை ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது.
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இந்தியாவில் விளையாட்டுத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.
துர்னோச்சார்யர் விருது இவ்விருது சிறந்த விளையாட்டு பயிற்றுனர்களுக்கு வழங்கப்படுகிறது.
தாதாசாகிப் பால்கே விருது திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனைப் புரிந்தோர்க்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருது எந்த ஒரு துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்திய காந்தி அமைதி விருது பன்னாட்டு அமைதி, வளர்ச்சி, பொருளாதார அமைப்பு, மக்களுக்கு பெரிதும் பயன்படும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக இந்திய அரசால் வழங்கப்படுகிறது.
கேன்ஸ் திரைப்பட விருது சர்வதேச திரைப்படங்களுக்கு தெரும் விருதாகும்.
கோல்டன் குளோப் விருது சிறந்த திரைப்படம் மற்றும் தொலக்காட்சி நிகழ்ச்சிக்கு வழங்கப்படுகிறது.
ஞானபீட விருது இது இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும்.
தயான் சந்த் விருது விளையாட்டுத்துறையில் உள்ள வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
அர்ஜீனா விருது விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
சாகித்ய அகாதெமி விருது இதுவும் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது ஆகும்.
ஆஸ்கார் விருது திரைப்படத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
புளிட்சர் விருது இலக்கியம், நாடகம், இசை மற்றும் பத்திரிக்கைக்காக வழங்கப்படுகிறது.
சி.கே.நாய்டு வாழ்நாள் சாதனையாளர் விருது கிரிக்கெட் வாழ்நாள் சாதனை புரிந்தோர்க்கு வழங்கப்படுகிறது.
ராமன் மகசேசே விருது அல்லது ஆசியாவின் நோபல் பரிசு அரசு சேவை, மக்கள் சேவை, இலக்கியம், அமைதி போன்ற துறைகளுக்கு வழங்கப்படுகிறது.
சரஸ்வதி சம்மான் விருது இந்திய மொழிகளில் எழுதப்பட்ட உரைநடை அல்லது கவிதைக்கு வழங்கப்படுகிறது.
கீர்த்தி சக்ரா மற்றும் அசோக சக்ரா விருது இந்திய படை வீரர்களின் வீர தீர செயல் மற்றும் தன்னலமற்ற தியாகத்திற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.
தேசிய திரைப்பட விருது திரைப்படத்தில் சிறந்து பங்காற்றிய கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
பரம்வீர் சக்ரா விருது வீரத்தையும் மற்றும் தன்னலமற்ற தியாகத்தையும் எடுத்துரைக்கும் வகையில் வழங்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *