கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகள்

கைபேசியிலிருந்து வெளியாகும் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகள்

கைபேசியில் நாம் பிறரிடம் பேசும்போதும், அவற்றின் மூலம் குறுஞ்செய்திகள் அனுப்பும் போதும் கதிரியக்கம் வெளியிடப்படுகிறது. இவற்றால் ஏற்படும் கதிரியக்கத்தால் ஏற்படும் உடல் நலக் குறைபாடுகள் பற்றி தெளிவாக அறியப்படவில்லை. எனினும் சில ஆய்வுகளின் முடிவுகள், செல்போனிலிருந்து வெளியாகும் கதிரியக்கம் மூளை மற்றும், வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோயினை ஏற்படுத்துகிறது எனக் கூறுகின்றன. இது தவிர குழந்தைகளின் பழக்கவழக்கத்தில் குறைபாடுகள் மற்றும் கோளாறுகளையும் கைபேசி கதிரியக்கம் ஏற்படுத்துகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, கீழ் வரும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

 1. கதிரியக்கம் குறைவாக வெளியிடும் செல்போன்களை வாங்குதல்
  உங்களுடைய கைபேசி விபரத்தை EWG வாங்குனர் கையேட்டில் சரிபார்க்கவும். (உங்களுடைய கைபேசியின் மாடல் அதன் மின்கலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்). உங்கள் தேவைகளை முழுதும் நிறைவெற்றக்கூடிய குறைந்த கதிரியக்கத்தினை வெளியிடும் வேறு கைபேசியை வாங்கலாம்)
 2. காதில் பொருத்தும் கேட்கும் கருவி அல்லது ஒலிபெருக்கியை பயன்படுத்துங்கள்
  காதில் பொருத்தும் கேட்கும் கருவி அல்லது ஒலிபெருக்கி குறைந்த கதிரியக்கத்தை வெளிப்படுத்துகின்றன (மாற்றுக் கருத்துக்களும் உள்ளன). வாங்குனர் கையேட்டை ஆலோசித்து சரியான கேட்கும் கருவியை வாங்கவும். சில ஒயர் இல்லாத கருவிகள் கூட தொடர்ந்து குறைந்த அளவிலான கதிரியக்கத்தை வெளியிடும். எனவே நீங்கள் அவற்றை உபயோகிக்காத போது காதிலிருந்து அகற்றி விட வேண்டும். உங்கள் கைபேசியில் உள்ள ஸ்பீக்கர் எனப்படும் ஒலிபெருக்கி கருவியினை உபயோகிப்பதன் மூலமும் உங்கள் தலைப்பகுதியினை தாக்கும் கதிர்வீச்சை குறைக்கலாம்.
 3. அதிகமாக கவனியுங்கள், குறைவாக பேசுங்கள்
  உங்கள் கைபேசியில் நீங்கள் பேசும்போதும், அல்லது குறுஞ்செய்திகள் அனுப்பும் போதும் கதிரியக்கம் வெளியிடப்படும். ஆனால் நீங்கள் குறுஞ்செய்திகள் பெறும்போது கதிரியக்கம் கைபேசியிலிருந்து வெளியிடப்படுவதில்லை. எனவே கைபேசியில் அதிகமாக கவனித்து, குறைவாக பேசி உங்களின் உடல் நலத்துக்கு கெடுதல் விளைவிக்கும் கதிரியக்க அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.
 4. உங்களுடைய உடம்பிலிருந்து கைபேசியை தள்ளி வைத்துக்கொள்ளுங்கள்
  நீங்கள் கைபேசியில் பேசும்போது உங்கள் உடம்பை விட்டு தள்ளி வைத்து பேசுங்கள். கைபேசியை எப்போதும் உங்கள் சட்டைப் பையிலோ அல்லது பெல்ட்டிலோ வைக்காதீர்கள். ஏனெனில் உங்களுடைய உடலிலுள்ள மிருதுவான பகுதிகள் அதிக கதிரியக்கத்தினை உட்கிரகிக்கும் தன்மை படைத்தவை.
 5. பேசுவதை விட அதிகமாக தகவல்கள் அனுப்புவதைத் தேர்ந்தெடுங்கள்
  கைபேசியில் பேசுவதை விட தகவல்களை குறுஞ்செய்திகளாக அனுப்பும்போது குறைவான கதிரியக்க அலைகளை உபயோகிக்கின்றன. காதில் வைத்து பேசும் போது உங்களுடைய தலைப்பகுதி அதிக கதிரியக்க அலைகளின் தாக்குதலுக்குள்ளாகின்றன. ஆனால் நீங்கள் தகவல்கள் அனுப்பும்போது உங்கள் தலைப்பகுதி கதிரியக்க அலைகளின் தாக்குதலுக்கு உள்ளாவது மிகவும் குறைவு.
 6. கைபேசியில் சிக்னல் குறைவாக உள்ளதா? கைபேசி உபயோகிப்பதைக் குறையுங்கள்
  உங்களுடைய கைபேசியில் சிக்னல் இருப்பதைக் காட்டும் கோடுகள் குறைவாக இருந்தால் உங்கள் கைபேசி சிக்னலைப் பெறுவதற்காக அதிக கதிரியக்க அலைகளை வெளியிடும். எனவே நன்றாக சிக்னல் இருக்கும்போது மட்டுமே கைபேசியை உபயோகியுங்கள்.
 7. குழந்தைகள் கைபேசி உபயோகிப்பதைக் குறைத்திடுங்கள்
  இளங்குழந்தைகளின் மூளை, பெரியவர்களின் மூளையை விட இரண்டு மடங்கு கைபேசி கதிரியக்க அலைகளை உட்கிரகித்துக்கொள்ளும். ஈடபுள்யூஜீ இயக்கம் உடல் நலத்தினை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்புகளுடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறு நாடுகளில் குழந்தைகள் அவசர சமயங்களைத் தவிர மற்ற நேரங்களில் செல்போன் உபயோகிப்பதைக் குறைக்க வலியுறுத்தியுள்ளது.
 8. ரேடியேசன் எனப்படும் கதிரியக்க அலைகளின் மறைப்பான்களின் உபயோகத்தினைக் குறைத்திடுங்கள்
  கதிரியகத்தினை வெளியிடும் ஆன்டெனா மூடிகள், விசைப்பலகை உறைகள் போன்றவை கைபேசியின் தொடர்பு கொள்ளும் செயல்முறையினைக் குறைத்துவிடுவதுடன் அதிக சக்தி வாய்ந்த அலைகளை வெளியிடச் செய்கின்றன. எனவே இவற்றின் உபயோகத்தினைக் குறைப்பது நல்லது.

கணினிகளின் கதிர்வீச்சுகளை எதிர்கொள்வதற்கு ஆறு எளிய அறிவுரைகள்

கணினிகள் (பி.சி) / மடிக் கணினிகளிளிருந்து வெளிவரும் கதிர்வீச்சு எவ்வாறு தீங்கு விளைவிக்க முடியும் என்பதை நீங்கள் எப்பொழுதாவது ஆச்சரியப்பட்டதுண்டா?

உங்களுடைய கணினி மற்றும் அதற்கு தொடர்பான பகுதிகளான கணினி அச்சுபொறி, கணினி ஒலித் தொடர்புக் கருவி, கம்பியில்லா வலையமைப்பு சாதனங்களிலிருந்து வெளியேற்றப்படும் மின்காந்த கதிர்வீச்சு, தூக்கமின்மையிலிருந்து உடல்நலம் எதிர்விளைவிக்கும் இதய நோய்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. எடுத்துக்காட்டாக, ஒரு பழைய சி.ஆர்.டி கணினி காணும்திரையானது 30 செ.மீ. அளவிற்கு 3 மில்லிகாஸ் உயரத்திற்கும் மற்றும் 4 மில்லிகாஸ் அளவிற்கு பக்கவாட்டிலும் கதிர்வீச்சுகளை வெளியேற்றும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அந்த தீங்கு விளைவிக்கக்கூடிய கதிர்வீச்சுகளை நீங்கள் தவிர்ப்பதற்கு உதவியாக சில அறிவுரைகள் இங்கே கூறப்பட்டுள்ளன.

 1. முதல் வேலையாக உங்களுடைய பழைய பி.சி இன்னும் சி.ஆர்.டி காணும்திரையாக (monitor) இருப்பின் அதை அகற்றுங்கள். ஆராய்ச்சியின் கூற்றுப்படி, பழையப் பெட்டி உருவத்தைக் கொண்ட கேத்தோடு ரே டியுப் (சி.ஆர்.டி) கணினி திரை அதிகளவான கதிர் வீச்சை வெளியேற்றுகிறது.
  எல்.சி.டீ திரைகள் ஓரளவிற்கு குறைவான கதிர்வீச்சை வெளியேற்றுகிறது. அறிக்கைகளின் கூற்றுப்படி, எல்.சி.டீ திரைக்கு முன்னால் அல்லது பின்னாலிலிருந்து 30 செ.மீ. அளவில் 0.3 மில்லிகாஸ் இ.எம்.எப் ( மிகவும் குறைவான அதிர்வெண்) –ஐ உருவாக்குகிறது மற்றும் நடைமுறையாக பக்கவாட்டில் எதையும் வெளிப்படுத்தாது.
  நவீனமயமாக்கப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய வடிவமைப்புகளை உருவாக்கியுள்ளவற்றை விட பழைய கணினிகள் இரு மடங்களவு கதிர்வீச்சை வெளியேற்றும் என்பதாக அறிக்கைகள் மேலும் ஆலோசனை அளிக்கிறது.
 2. கதிர்வீச்சு வடிகட்டும் திரை ஒன்றை இணைப்பதால் கணினி கதிர்வீச்சின் விளைவை மேலும் குறைக்க முடியும். மேலும், உங்களுடைய கணினிக்கு அருகில் ஏதாவது உலோக பொருள்கள் வைப்பதை தடுக்க வேண்டும், அவைகள் மின்காந்த அலைகளை பிரதிபலிக்கும்
 3. கூற்றின் அறிக்கைகளின் படி உங்களுடைய கணினி திரையின் பிரகாச அளவு பார்ப்பதற்கு வசதியாக வைத்துக் கொள்ளவேண்டும். அதிகமான பிரகாசம், அதிக கதிர்வீச்சு ஏற்படுத்தும் மற்றும் குறைவான பிரகாசம் குறைவானதை ஏற்படுத்தும். மேலும், திரைப் பிரகாசம் மிகவும் குறைவானதாக இல்லாமல் இருக்குமாறு உறுதிசெய்துக் கொள்ளுங்கள், இது உங்களுடைய கண்களுக்கு தீங்கு விளைவிக்ககூடியதாக இருக்கலாம். திரையிலிருந்து 50 செ.மீட்டரிலிருந்து 75 செ.மீட்டர் தூரத்தில் அமர்ந்து பணிசெய்யலாம்.
 4. தீங்குவிளைவிக்கும் கணினி கதிர்வீச்சு குறைப்பதற்கு, கணினியை எங்கே வைக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கவேண்டும். உட்கார்ந்து பார்த்து கொண்டிருக்கும் யாரவது நபருக்கு முன் கணினியின் பின்புறம் இருக்குமாறு வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. ஆய்வின் கூற்றுப்படி, கணினியின் பின்புறம் அதிகமான கதிர்வீச்சு வெளியேற்றுவதாக இருக்கிறது. அதேவேளை திரையின் முன் பகுதி குறைவான கதிர்வீச்சை வெளியேற்றுகிறது.
 5. அறிக்கைகளின் கூற்றுப்படி, கற்றாழை தாவரம் கதிர்வீச்சை கிரகித்துக்கொள்ளக்கூடிய தன்மையை கொண்டிருக்கிறது, இது புதிதாக இருக்கலாம், ஆனால் பயன்படக்கூடிய ஒன்று. ஆதலால் வேலைசெய்யும் இடங்களில் பாலைவன தாவரங்களை வைப்பது தீங்குவிளைக்கவிக்கக்கூடிய கதிர்வீச்சுகளை பயன்விளைவாக கிரகித்துக்கொள்ள உதவி செய்யலாம்.
 6. கணினி திரை வெளியேற்றும் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய அடிப்படை கூறானது உங்கள் உடல் நலத்தை மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடும். அறையில் உரிய காற்றோட்டத்தை உறுதி செய்வதால் இத்தீங்கை குறைக்க முடியும். மேலும், உங்களுடைய கணினிக்கு அருகில் காற்றோட்ட குளிர்ச்சியூட்டலை / மின்விசிறியை வைப்பது உதவியளிக்கலாம். மேலும், நீங்கள் கணினியில் வேலை செய்யும் வேளையில் உங்களுடைய முகத்தின் மீது ஒட்டியிருக்கும் சில மின்காந்த கதிர்வீச்சு துகள்களை நீக்குவதற்கு நீங்கள் அடிக்கடி முகங்கழுவ வேண்டும். சாதாரணமாக இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலம் முடிந்தளவு கதிர்வீச்சின் 70% -லிருந்து விடுபட இது உதவி செய்யும்.

Leave a Reply